Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

கல்விக்கடன் ரத்து செய்யப்படும்மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தொரப்பள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்கள் குறை கேட்டார். அவரிடம் பெண்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சந்தேகம் இல்லை

மத்தியில் மோடி ஆட்சியை அப்புறப்படுத்தக்கூடிய சூழல் வந்து விட்டது. மோடி ஆட்சி அப்புறப்படுத்தப்படுகின்ற போது தி.மு.க. தயவோடு, தி.மு.க. கூட்டணியில் மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி அமையப்போகின்றது. தி.மு.கவால் அடையாளம் காட்டப்படுபவர் தான் இந்த நாட்டின் பிரதமராக வரப்போகின்றார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலுடன், 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.



கல்விக்கடன் தள்ளுபடி


தேர்தல் வைத்தால் அதிலும் அ.தி.மு.க. தோற்றுப்போய் விட்டால் ஆட்சியில் இருக்க முடியாது. ஏனென்றால், மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி நிலையில் இன்றைக்கு ஆட்சி இருக்கின்றது. எனவே, அந்த நிலையில் தேர்தல் வைக்கின்றார்களா?. வைக்கவில்லையா? என்பது தெரியாது. ஏனென்றால் இவர்கள் சொல்வதை தானே மோடி செய்கின்றார். மோடி இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக்கின்றார்கள் அது ஒரு பக்கம், எது எப்படி இருந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் நீங்கள் எல்லோரும் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை எல்லாம் தேடி நாடி நான் வந்திருக்கின்றேன்.



கல்விக் கடனைப் பொறுத்தவரைக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வந்த போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், நம்முடைய கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் வங்கிகளில் மாணவர்கள் வாங்கியிருக்கின்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் என்று உறுதியை அப்பொழுதே தந்தோம். ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி அதைச் செய்யவில்லை. இப்பொழுது நான் உறுதியாக சொல்லுகின்றேன். இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட நாங்கள் சொல்லப்போகிறோம். தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமைகின்ற போது நிச்சயமாக மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Popular Feed

Recent Story

Featured News