Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

தமிழ் ஞானத்தை உணர்ந்தவர்கள் சாகாத் தமிழர்கள்! - இமயஜோதி திருஞானானந்தா சுவாமிகள் பேச்சு..!





சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருமூலர் ஆய்வு இருக்கையின் நான்காம் ஆண்டு தொடக்கவிழா 23.02.2019 அன்று நடைபெற்றது. திருமூலரும் வள்ளலாரும் எனும் பொருண்மையில் இமயஜோதி திருஞானானந்தா சுவாமிகள், ஞானாலயா வள்ளலார் கோட்டம், கோவை, அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் கூறுகையில் எண்ணங்களற்ற மோன நிலையே தவம். அதிகாலையில், மதியம் உணவுக்கு முன்பு மற்றும் மாலையில் என மூன்று நேரமும் தலா இருபத்திநான்கு நிமிடங்கள் எண்ணமற்ற நிலையில் எவரொருவர் தன்னைச் செலுத்திக்கொள்கிறாரோ அவருக்கு கபம், பித்தம் ,வாதம் அண்டாது . பினியற்ற வாழ்க்கை வாழ இதுவே சித்தர்கள் எமக்கு அளித்த அருமருந்து. எண்ணங்களற்ற நிலையில் எவர் ஒருவர் இருக்கின்றாரோ அவரே இவ்வுலகை ஆளுவார்.


அமுத்தை உண்டவர்களுக்கு நோய் வராது, முதுமை வராது, இறப்பு வராது. தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த அமுத்தை உண்டவர்களுக்கும் இறப்பு வராது! அப்படி அந்த அமுதை எடுத்துக்கொண்டவர்கள் சுத்தத் தமிழர்கள் எடுத்துக்கொள்ளாதவர்கள் செத்தத் தமிழர்கள்! உலகத்தில் ஒரே ஒரு கல்வி இருக்கின்றது. அது சாகாக்கல்வி. அதுதான் தமிழ்க் கல்வி! தமிழ் மொழியில் உள்ள ஞானத்தை உணர்ந்தவர்கள் சாகாத் தமிழர்களாகத் திகழ்வார்கள்! என எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமை வகித்தார். அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.திருமூலர் ஆய்விருக்கையின் பொறுப்பாளர் பேரா. முனைவர் மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் திரு வேதபுரி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்.

பாட்லீஸ் கண்ணன், வீராசாமி ஆகியோருக்கு திருமந்திர ஆன்மீகச் செம்மல் விருதும் , வழங்கப்பட்டது பாஸ்கரன், ஜெயசந்திரன், சதுரகிரியார், சூரியவர்மன்,, இராணி இளவரசன், இரஜேஷ், மரைமலை வைரமுத்து, பார்த்திபன் உள்ளிட்ட மருத்துவர்கள் பேராசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News