Monday, February 18, 2019

மடித்தால் ஸ்மார்ட் வாட்ச்; பிரித்தால் ஸ்மார்ட்போன்


லேப்டாப் போன்று மடித்து வைக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை சீன நிறுவனம் தயாரித்துள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் பிரபல நிறுவனமாக திகழ்கிறது

சீனாவின் டிசிஎல். இந்த நிறுவனத்திற்கும், உலக அளவில் ஸ்மார்ட்போன், மேக் கம்யூட்டர், வாட்ச் உள்ளிட்ட உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கும் வியாபார போட்டி நிலவி வருகிறது. இரண்டு நிறுவனங்களும் நாள்தோறும் புதிய வசதிகள் கொண்ட பல்வேறு தொழில்நுட்பப் பொருட்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் இரண்டு நிறுவனங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதற்கு பல யுக்திகளை கையாண்டு வருகின்றன.




இந்நிலையில் டிசிஎல் நிறுவனம் லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்று மடித்து வைத்துக்கொள்ளும் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக களமிறங்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை, ஸ்மார்ட்போனாகவும் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் வாச் 2020ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய முயற்சியின் மூலம் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் 'ஆப்பிள்' நிறுவனத்தை டிசிஎல் பின்னுக்குத் தள்ளும் எனக் கூறப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News