Monday, February 18, 2019

அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?: ஜியோ வழக்கு விசாரணையின் போது நீதிபதி கேள்வி

மதுரை: ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணையின் போது அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேளிவி எழுப்பினார். அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டால் என்ன? என்றும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரி படிப்பில் முன்னுரிமை தரலாமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
















அரசின் ஒரு ரூபாய் வருமானத்தில் ஊழியர்களுக்கே 71 காசுகள் செலவு செய்வதாக அரசு வக்கீல் தகவல்


▪️ஜாக்டோ ஜியோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர் வாதம்
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?

- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின்போதும் அரசு ஊழியர்கள்-தனியார் ஊழியர்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரிப்பு

*அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"*

*ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"*



*அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?"*

*B.E, M.B;B.S, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*

*போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஏன் சம்பளம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி*

- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து





Popular Feed

Recent Story

Featured News