Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' -அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'

பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' தெரிவித்துள்ளது.



அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை:துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சம்பள செலவினத்திற்கு, 55 ஆயிரத்து, 399 கோடி ரூபாய்; ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வுக்கால பயன்கள் குறித்த செலவுக்கு, 29 ஆயிரத்து, 627 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 2019 - 20ம் ஆண்டிற்கான, மொத்த வருவாய் செலவினத்தில், 40.10 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



வேலை நிறுத்தத்தின் போது, 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு, அரசின் மொத்த வரி வருவாயில், 71 சதவீதம் செலவிடப்படுகிறது' என, அமைச்சர் ஜெயகுமார், தவறான செய்தியை தெரிவித்து உள்ளார்.பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள், அரசின் பரிசீலனையில் உள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இதை, ஜாக்டோ -ஜியோ அமைப்பு வரவேற்கிறது.இந்த பட்ஜெட் அறிக்கை, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.