தமிழக அரசின், 'சுற்றுச்சூழல் விருது' பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.தமிழகத்தில், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, ஆராய்ச்சி பணிகளில், சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 2018ம் ஆண்டின், 'சுற்றுச்சூழல் விருதுகள்' வழங்கப்பட உள்ளன. இவ்விருது பெற, தனி நபராக இருந்தால், 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளில், தனிநபர் மற்றும் நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே, விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும்.
மூன்று பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே, விருது பெற்றவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆறு நகல்களில், 'இயக்குனர், சுற்றுச்சூழல் துறை' என்ற பெயரில், 100 ரூபாய்க்கான கேட்பு காசோலையுடன், மூன்று புகைப்படங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.அதேபோல், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை விருதுக்கும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்ப படிவங்களை, சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள, சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில், ஏப்., 10ம் தேதி வரை பெறலாம் அல்லது,
www.environment.tn.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஏப்., 15க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2433 6421, 2433 6594 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.