Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

நாம் பயன்படுத்தும் பாமாயில் நல்லதா….? கெட்டதா…?


நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் சமையலில் பயன்படுத்தப்படும் பாமாயிலை இதய நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.



நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் ஆகும். இது விலை மலிவானது என்பதால், எல்லா உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.



பாமாயிலில் இரண்டு வகைகள் உள்ளது. முதல் வகை பாமாயில் பனம் பழத்தில் இருந்து எடுக்கப்படுவது, இரண்டாம் வகை பாமாயில் பனங்கொட்டையில் இருந்து எடுக்கப்படுவது.
பாமாயிலை தவிர்க்க வேண்டியவர்கள்
இதயநோய்

பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. எனவே இதனை இதய நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. இந்த எண்ணெயை நமது உணவில் சேர்க்கும் போது, இதய நோய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.



குடும்பத்தில் உள்ளவர்களுக்கு யாருக்காவது இதய நோய் இருந்தலும், இந்த எண்ணெயை தவிர்ப்பது நல்லது.

உடல் எடை

உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் பாமாயில் பயன்படுத்துவதையும், இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

இந்த எண்ணெயில் அதிகப்படியான கொழுப்பு உள்ளதால், உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது நல்ல தீர்வை தராது.
பாமாயிலின் நன்மைகள்



பாமாயில் எண்ணெயில் நன்மைகளும் உள்ளது. பாமாயிலில் உள்ள டோக்கோஃபேரல்கள் இயற்கை ஆண்டிஆக்சிடென்ட்களாக செயல்பட்டு உடலில் புதிதாக ஏற்படும் எந்த ஒரு அசாதாரணமாக செல்களையும் அளித்துவிடக் கூடிய ஆற்றலை கொண்டது.
கண் பிரச்சனை

பாமாயில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதோடு, கண்பார்வையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளமை தோற்றம்



பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளதால், இது முதுமை ஏற்படுவதை தடுத்து இளமை தோற்றத்தை அளிக்கிறது. தொடர்ச்சியாக இந்த எண்ணெயை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, பளபளப்பை தருகிறது.
சத்து குறைபாடு

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், இந்த பாமாயிலை அனுதினமும் பயன்படுத்தி வந்தால், இந்த குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியமாக உடலை வைத்து கொள்ள உதவுகிறது.

Popular Feed

Recent Story

Featured News