Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், கானல் வரி கலை இலக்கிய இயக்கம், கற்க அறக்கட்டளை, உலகத் தமிழிசைப் பேரவை ஆகியவை இணைந்து நடத்தும் முதல் உலகத் தமிழிசை மாநாடு.


உலகத் தமிழிசை மாநாடு

நாள் : 16.08.2019 - 17.08.2019

இடம் : தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பொருண்மைகள்:

👉தமிழிசை அரங்கேற்றம் :
மாநாட்டில் அனைத்து வகையான தமிழிசைக் கருவிகளையும் கலைஞர்களையும் கொண்டு இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்தல்,




👉 இசைக் கருவிகள் காட்சியரங்கம்: மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழிசைக் கருவிகள் மற்றும் தமிழகப் பழங்குடிகளின் இசைக் கருவிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துதல்,

👉ஆய்வரங்கம்: தமிழிசையின் தொன்மை, வகைப்பாடு, சந்தம், இசை மருத்துவம், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, தமிழிசை நாடகம், அயல்நாடுகளில் தமிழிசை, மக்களிசை, தமிழிசைக் கல்வி, இலக்கியத்தில் இசை, தமிழிசை ஆய்வுகள், தமிழிசை ஆளுமைகள், இசைத் தூண்கள், கருவி வகைகள், கருவிகள் செய்முறை,  தமிழிசைக் கலைஞர்களின் வாழ்வியல் , தமிழகப் பழங்குடிகளின் இசை, தமிழிசையும் பிற இசைகளும் ஆகியன குறித்து ஆய்வுரை நிகழ்த்துதல்,

👉விருதுகள்: தமிழிசைக் கலைஞர்களுக்கும் தமிழிசை அறிஞர்களுக்கும் மாநாட்டுக்குழு சார்பிலும் உலகத் தமிழிசைப் பேரவை சார்பிலும் தமிழிசைச் செம்மல், தமிழிசை ஞானி, இளம் தமிழிசை ஞானி, ஆப்ரகாம் பண்டிதர் விருது, கானல்வரி - கற்க அறக்கட்டளை விருது போன்ற விருதுகள் வழங்குதல்,

👉குறிப்பு : ஆய்வுக் கட்டுரைகள், இசை நிகழ்ச்சி அரங்கேற்ற விருப்பப் படிவம், விருதுக்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 30.06.2019




👉மாநாட்டு மலர்: தமிழிசைக் கலைஞர்கள்/ அறிஞர்களின் புகைப்படத்துடன்கூடிய வாழ்க்கைக் குறிப்புகள், சாதனைகள் , தமிழிசைக் கருவிகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், மாநாட்டு நிகழ்வுகள் ஆகியன அடங்கிய மாநாட்டு மலர் வண்ணத்தில் வெளியிடப்படும். விருப்பமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களின் குறிப்புகளையும் தமிழிசைச் சார்ந்த அமைப்புகளின் விளம்பரங்களையும் அனுப்ப கடைசி நாள்: 15.07.2019.

👉தமிழிசை - பன்னாட்டு மின்னிதல்: ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்னிதலாகவும் நூலாகவும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

ஒருங்கிணைப்புக் குழு :

முனைவர் கு. சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்
அயல்நாட்டுத் தமிழர் புலம்- உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
கைபேசி: +91-9500106269

முனைவர் இரா.மாதவி
துறைத் தலைவர்
இசைத் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
கைபேசி: +91-9442318569

முனைவர் இரத்தின புகழேந்தி
கானல் வரி கலை இலக்கிய இயக்கம்.
கைபேசி:+91-9944852295