Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

இடி இடிக்கும் போது "அர்ஜுனா அர்ஜுனா" என சொல்ல காரணம் தெரியுமா..?




கொட்டும் மழையில் கூடவே பலத்த இடியும் இருந்தால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள்...அதுவும்நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் திடீரென கேட்கும் இடி சப்தத்தால் கண்டிப்பாக பயப்படுவார்கள் அல்லவா..? உடன் மின்னல் வேறு என்றால்..ஒரு விதமான பயம் நம்மை மீறி நமக்கே இருக்கும் தானே..சரி விஷயத்துக்கு போகலாம்.




மழை பெய்யும் போது இடி இடித்தால் அர்ஜுனா அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும் அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருப்பவங்க பெரியவங்கஉண்மையில் உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா? இடி இடிக்கும் போது சிலரது காது அடைத்து ஒருவிதமான சப்தம் கேட்கும்.. இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும் காது அடைக்காது."அர்" என்று சொல்லும்போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். "ஜு" என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். "னா"என்னும் சொல்லும் போது வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும் இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது/




அதற்குதான் அர்ஜுனாவை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன் காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைத்து, அன்று முதல் இன்று வரை அர்ஜுனா என்றே சொல்லாகிற்று.