Saturday, February 16, 2019

சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம்

15.02.2019 தருமபுரி மாவட்டம், கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம், நடைபெற்றது.

இக்கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தொடங்கி வைத்தார். சுமார் 100க்கும் அதிகமான தமிழ்நாட்டு பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிதிருந்தது.


பறவைபார்த்தல் -அறிமுக கருத்தரங்கில் பறவை ஆர்வலர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் திரு.செழியன்.ஜா மற்றும்
பறவை ஆர்வலர்,சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.மாசிலாமணி செல்வம்* ஆகியோர் கருத்தாளர்களாக கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பறவைகளை பார்த்தல், பறவைகளை அடையாளம் காணல், அதனை இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து விவரித்ததோடு, மாணவர்களை பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கு அழைத்துச்சென்று சுமார் நீலவால் பஞ்சுருட்டான், புதர்ச்சிட்டு, வல்லூறு, பனை உழவாரன், குண்டுகரிச்சான், பனங்காடை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பறவையினங்களை அடையாளம் காட்டி பறவை பார்த்தல் குறித்த நுட்பங்களை விளக்கினார்கள்.



நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ப.லோகநாதன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் தமிழகப் பறவைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.

Popular Feed

Recent Story

Featured News