Monday, February 18, 2019

ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது நீங்கள் யோசிக்க வேண்டியது என்னென்ன ?

ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பது தற்போது அனைவருக்கும் பெரும் கனவாகவே இருக்கிறது எனலாம்

. ஆனாலும் பெரிய குழப்பம் எழுவதும் சகஜமான ஒன்று. ஏனென்றால் எக்கச்சக்க பிராண்ட்கள், ஏராளமான சாய்ஸ்கள் இருந்தால் சரியான, நமக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்படும் என்பது உண்மை தான். அதற்காகத்தான் உங்களுக்கு இந்த கெய்ட்லைன்ஸ் Things to consider when buying a smartphone : ஒப்பீடு செய்யுங்கள் முதலில் உங்களுக்கு எந்த மாதிரியான ஸ்மார்ட்போன்கள் தேவை என்ற முடிவிற்கு நீங்கள் முதலில் வர வேண்டும். உங்களின் பட்ஜெட்டிற்குள் அந்த போன் இருந்தால், அதன் சிறப்பம்சங்களை மற்ற போன்களுடன் உங்களின் சாய்ஸ்ஸை ஒப்பிட்டுப்பாருங்கள்.

உங்களுக்கு 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் தான் வேண்டுமென்றால், யோசித்துக் கொள்ளுங்கள், ஸ்மார்ட்போன் என்பது ஒருவித முதலீடு. குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது அதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை கவனித்தில் கொண்டு உங்களின் தேவையை பரிசீலனை செய்யுங்கள். உங்களின் தேவை எதுவென அறிந்து கொள்ளுங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு அவசரம் வேண்டாம். தினம் தினம் நிறைய போன்கள் அறிமுகமாகின்றன.


ஆனால் உங்களின் தேவை என்ன ? சிலருக்கு அதிக நேரம் பேட்டரி பயன்பாட்டுடன் கூடிய போன் தேவையாக இருக்கலாம். சிலருக்கு அதிவேகத்தில் செயல்படும் போன் தேவைப்படும். சிலரோ செல்ஃபி அடிக்க்டுகளாக இருப்பார்கள். அதனால் உங்களின் தேவை இதில் மிக முக்கியமான ஒன்று. ஸ்க்ரீன் ப்ரைட்னெஸ் ஃபுல் ஹெச்டியோ குவாட் எச்.டியோ என்பதை மனிதர்கள் தங்களின் பார்வையால் உணர முடியாது. ஆனால் ஒரு போனின் ப்ரைட்நெஸ் மற்றும் கலர் தேவைகளை நன்றாக உணர முடியும். எனவே நல்ல ப்ரைட்னஸ் ஸ்கீரின் கொண்ட போன்களை தேர்வு செய்வது நலம். அதே போல் பெரிய ஸ்க்ரீன் சைஸ் கொண்ட போன்களை தேர்வு செய்வதும் நல்லது. தொடுதிரையைப் பொறுத்தவரை, ஓ.எல்.இ.டி. திரையானது எல்.சி.டி திரையைவிட நல்ல காண்ட்ராஸ்ட் மற்றும் டீப்பர் ப்ளாக்குகளை தரக் கூடியது.


ஆனால் இந்த திரையுடன் வெளியாகும் போன்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதில்லை. அளவு போன் கைக்கு அடைக்கமாக இருந்தால் தான் உபயோக்கிக்க எளிமையாக இருக்கும். எனவே மிகப்பெரிய அளவுள்ள, எடை கொண்ட போன்களை தவிர்த்துவிடலாம். சிறப்பம்சங்கள் எப்போதும் சிறப்பம்சங்கள் என்பதன் பின் செல்ல வேண்டாம். யோசியுங்கள். 8ஜிபி ரேம்மிற்கும் 6 ஜிபி ரேம்மிற்குமான வித்யாசம் என்பதை கவனித்து அதற்கு பின்பு போன்களை வாங்கினால் போதும். உங்களின் தேவைக்கேற்றவாறு போன்களை தேர்வு செய்வதே நலம். போன் கால்கள், போட்டோக்கள், செல்ஃபிக்கள், ஆல் டே லாங் ஆன்லைன் சாட்கள் என்றால் உயர் தொழில்நுட்பம் கொண்ட காஸ்ட்லி போன் தேவைக்கு அதிகமானது.


சேமிப்பு அம்சங்கள் நீங்கள் 128 ஜிபிக்கு ஒரு போனை நல்ல டீலில் பார்த்தால் அதனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம். மாறாக 32ஜிபி அல்லது 64 ஜிபி போதுமானதாக இருக்கும். காரணம் ? நிறைய ஸ்பேஸ் இருந்தால் நிறைய கேம்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என போனின் ஃபெர்பார்ம்ன்ஸை டம்ப் செய்யும் அளவிற்கு ஸ்டோர் செய்து கொண்டே இருப்பீர்கள். மைக்ரோ எஸ்டி கார்ட் எக்ஸ்பேன்சனுடன் கூடிய போன் என்றால் அதி சிறப்பு. நீடித்து உழைக்கும் பேட்டரி கேமரா ஆப்பெர்ச்சர் அடிக்கடி ஓ.எஸ். அப்டேட் தரக்கூடிய ஆண்ட்ராய்ட் போன் மார்ச் மற்றும் நவம்பரில் சாம்சங் மற்றும் ஆப்பிளின் புதிய அப்டேட்டுகள் வரும். அதற்கேற்றாற் போல் நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் படிக்க : ஒரே வாரத்தில் இத்தனை போன்களா ? பட்ஜெட் வாடிக்கையாளர்களின் பிரச்சனை தீர்ந்தது

Popular Feed

Recent Story

Featured News