Monday, February 18, 2019

தங்கத்தின் இருப்புக்கு ஏற்றவாறு எல்லா நாடுகளும் கரன்சிகளை வெளியிடுகின்றன என்றால், இவற்றை யார் கண்காணிக்கிறார்கள்? ரூபாயின் மதிப்பில் மாற்றம் வருவது ஏன்?


அந்நியச் செலாவணி என்பது ஒரு நாட்டின் கரன்சியை இன்னொரு நாட்டின் கரன்சியோடு மதிப்பிடுவது. இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பில் இந்தியாவின் ரூபாயைத் தவிர, கரன்சி, வங்கி வைப்புநிதி, பத்திரங்கள், நிதித் தொடர்பான சொத்துகள் போன்றவை இருக்கும். இந்தக் கையிருப்புகளை அந்நியச் செலாவணிக்காகவும் இந்திய அரசாங்கத்துக்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.


அந்நியச் செலாவணி கையிருப்பைப் பொறுத்து அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு மதிப்பிடப்படும். கையிருப்பு அதிகமாக இருந்தால் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகமாகும். இந்தியாவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உலக வங்கி கடன் கொடுக்கும். அதை வைத்து இந்தியாவில் பல முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டுவர முடியும். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தால், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் குறையும். உலக வங்கி கடன் கொடுக்காது. அமெரிக்க டாலரின் மதிப்பு உலக அளவில் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருப்பதால், அமெரிக்க டாலரை வைத்துதான் பிற நாடுகளின் கரன்சி மதிப்பு கணக்கிடப்படுகிறது, சுந்தர நிலவன்.


சரி, அந்நியச் செலாவணி எப்படிக் கிடைக்கும்? பொருட்களை இறக்குமதி செய்பவர்கள், வெளிநாட்டில் முதலீடு செய்பவர்கள், வெளிநாட்டில் பயணம் செய்பவர்கள், பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றவர்கள், இந்தியாவில் பயணம் செய்யும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு அந்நியச் செலாவணி தேவைப்படும்.


இவர்கள் தங்களுக்குத் தேவையான அந்நியச் செலாவணியைப் பெற வங்கியை அணுக வேண்டும். வங்கிகள் அந்நியச் செலாவணியை முகவர்கள் மூலம் வாங்கவும் விற்கவும் செய்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை நிலையாக வைத்திருக்க, அந்நியச் செலாவணி சந்தையில் பல நாடுகளின் கரன்சிகளை வாங்கி, விற்கும்.

Popular Feed

Recent Story

Featured News