Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 11, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு கைவிடவேண்டும்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மாணவர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.



இருந்தபோதும், அவர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், பணியில் சேர மறுப்பது, ஊதியம் நிறுத்திவைப்பு, தற்காலிகப் பணி நீக்கம், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அவர்கள் மீது தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊழியர் விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும்.
அவர்கள் பணியாற்றிய இடத்திலேயே மீண்டும் அவர்களுக்கு பணி வழங்குவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.