Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 8, 2019

செய்முறைத் தேர்வுகள்: தேர்வுத் துறை அறிவுறுத்தல்

பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வுகளில் விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பிப்ரவரி 1-ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கியது. மாவட்ட வாரியாக, 12-ஆம் தேதிக்குள் இந்தத் தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பிப்ரவரி 13-, பத்தாம் வகுப்புக்கு பிப்ரவரி 21-ஆம் தேதியும் செய்முறைத் தேர்வுகளை தொடங்கி இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.



இதில், பல பள்ளிகளில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், பெயரளவில் செய்முறைத் தேர்வை நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு, ஆய்வக உபகரணங்களின் பெயர் கூடத் தெரியாமல், செய்முறைத் தேர்வை முடித்து விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசுத் தேர்வுத்துறை சார்பில் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வை, மாணவர்களின் திறன் அறியும் வகையில் நடத்த வேண்டும். அதற்கு முன், ஆய்வக உபகரணங்கள், ரசாயனப் பொருள்களைப் பிரித்தறியும் திறன் இருக்கும் வகையில், பயிற்சிகளை முறையாக வழங்க வேண்டும். இதில், விதிமீறலுக்கு இடம் தரக்கூடாது' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News