Saturday, February 2, 2019

ஆதார் கார்டில் தெளிவாக இல்லாத புகைப்படத்தை மாற்றுவதற்கு புதிய ஏற்பாடு: உள்ளே லிங்க்.!





How to Change Aadhaar Card Photo Online-Offline.ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயணிக்கும் சூழ்நிலையே இங்கு உருவாகி இருந்தது.
How to Change Aadhaar Card Photo Online-Offline.ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயணிக்கும் சூழ்நிலையே இங்கு உருவாகி இருந்தது.

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை.



அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயணிக்கும் சூழ்நிலையே இங்கு உருவாகி இருந்தது.

புகைப்படத்தை மாற்ற அனுமதி

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கமும் ஒரு தீர்வை வழங்க முடிவு செய்து, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற பயனர்களுக்கு அனுமதியும் வழங்கியிருந்தது. அதன்படி உங்கள் ஆதார் அட்டையில் உள்ள ஆதார் புகைப்படத்தை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஆன்லைன் சேவை

உங்களின் ஆதார் புகைப்படத்தை மாற்ற எவ்வித ஆன்லைன் சேவைக்கும் இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதே உண்மை. ஆன்லைன் இல் புகைப்படத்தை மாற்றுவது பாதுகாப்பானதல்ல என்ற காரணத்தினால் அரசாங்கம் ஆன்லைன் சேவையை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ஆஃப்லைன் முறை

உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை பயனர்கள் இரண்டு முறையில் மாற்றிக்கொள்ளலாம், இவ்விரண்டு முறைகளுமே ஆஃப்லைன் முறைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கம் ஆஃப்லைன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
முழு விபரங்களுடன் கடிதம்

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றப் பதிவு மையத்தை நீங்கள் நாடவேண்டும் அல்லது உங்கள் ஆதார் அட்டைப் புதுப்பிக்கப்பட்ட புகைப்படம் பெற UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுத வேண்டும்.

செயல்முறை 1:

ஆதார் அப்டேட் படிவத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். https://uidai.gov.in/images/UpdateRequestFormV2.pdf
இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கரெக்ஷன் படிவத்தைச் சரியாக நிரப்பி UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுதி அனுப்பினால் இரண்டு வாரங்களுக்குள் உங்களின் புதிய ஆதார் கார்டு வீடு வந்து சேரும்.

செயல்முறை 2:



அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் சென்று, உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற நேரடியாகப் புகார் அளிக்கலாம். இரண்டு வாரங்களுக்குள் புகைப்படம் மாற்றப்பட்ட புது ஆதார் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்து புதிய கார்டு வழங்குவதற்கு ரூ.15 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்

ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருந்தவர்களுக்கு தீர்வளிக்கும் விதமாக சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பில் வங்கி கணக்குகள், மொபைல் நம்பர்கள் மற்றும் பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



டிஜிட்டல் வாலெட்

இதனால் வங்கி கணக்கு திறக்கும் போது, புதிய மொபைல் இணைப்பு பெறும் போது, அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சேவைகளை தொடர்வதற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய கட்டாயம் நீங்கியிருக்கிறது. ஆதார் தீர்ப்பை தொடர்ந்து பலரும் தங்களது ஆதார் நம்பரை அவரவர் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலெட் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து டீலின்க் செய்ய ஆர்வம் செலுத்துகின்றனர்.

பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள்:



வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதார் நம்பரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள் அறியப்படாத நிலையில், பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். எனினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதாரை டீலின்க் செய்ய நினைப்போர் அருகாமையில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News