Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 14, 2019

காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத பி.டெக். மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


சென்னை ஐஐடி-யும், காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் நிறுவனமும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஐஐடிடிஎம் நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சிறந்து விளங்கும் முதல் 10 சதவீத மாணவர்கள் அவர்களுடைய 6 ஆம் பருவத் தேர்வுக்குப் பிறகு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

அதன் பிறகு அவர்கள் பி.டெக். படிப்புக்கான 7 ஆம் பருவம், 8 பருவத் தேர்வுகளை சென்னை ஐஐடி-யில் முடித்துக்கொள்ள முடியும். அதோடு, இரு நிறுவன ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சி, கல்வித் திட்டங்களிலும் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News