Thursday, February 14, 2019

எறும்புகள், மண்புழுக்கள், கரப்பான் பூச்சிகள் போன்ற முதுகெலும்பில்லாத பிராணிகளுக்கு இதயம், ரத்த ஓட்டம் முதலியன இருக்கிறதா?’



பூச்சிகள், எறும்புகள், கரப்பான்கள் இவற்றிற்கும் ரத்த ஓட்டம் உண்டு.
இந்த ரத்தத்தின் பெயர் ஹிமோலிம்ஃப் ஆகும். இந்த ஹிமோலிம்ஃப் எனும் ரத்தமானது ஹீமோசயானின் என்ற வேதிப்பொருளால் இப்பிராணிகளின் மேல் சருமத்தின் மூலம் பெறப்படும் பிராண வாயுவைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இந்த ரத்த ஓட்ட முறையானது "திறந்த முறை" எனப்படும்.



பூச்சிகளின் உடலில் உள்ள வெற்றிடங்கள் மிக மெல்லிய திசுக்களால் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ரத்த நாளம் மட்டும் இவற்றின் மூளையிலிருந்து வயிற்றுப் பகுதிவரை செல்கிறது. இதுவே இதயம் போல செயலாற்றுகிறது. இந்த நாளமும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வால்வுகளின்றி, இதனுள் உள்ள திசுக்களால் சுருங்கியும் விரிந்தும் செயலாற்றி ரத்த சுழற்சிக்குக் காரணமாகிறது.
ஒருமுறை தலையை நோக்கிச் செலுத்தப்பட்ட ரத்தமானது, பூச்சிகளின் மேல் தோலில் படும் பிராணவாயுவினால் ஹீமோ சயானால் சுத்தமாகி, மறுபடியும் வயிற்றை வந்த அடைகிறது. இவ்வாறாக இந்த இதயம் செயலாற்றுகிறது.
பிராணவாயு குறைந்து காணப்படும் இடங்களில் வாழும் பூச்சிகளுக்கு ஹீமோகுளோபின் போன்ற வேதிப் பொருள் பிராண வாயுவை திசுக்களால் செலுத்துகிறது.



மண் புழுக்கள்:-

ஒலிகோசேடா என்ற வகையைச் சார்ந்தவை. இவை "மூடப்பட்ட ரத்த ஓட்டம்" கொண்டவை. ரத்தநாளங்கள் உண்டு. மனிதனுக்குள்ளது போலவே ஆனால் வளைவுடன் கூடிய ஒரு மகாதமனியானது இதயத்தின் செயல் பாட்டைக் கொண்டுள்ளது.
மண் புழுக்களுக்கு மூச்சுக் குழல்கள் இல்லை. ஆனால் எப்போதுமே ஈரத்துடன் கூடிய இவற்றின்மேல் தோல் மூலமே இவை சுவாசிக்கின்றன. மண் புழுக்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உள்ளது. இதன் மூலமாக அவை பிராணவாயுவைப் பெற்று ரத்தச் சுழற்சியைத் தொடர்கின்றன.

Popular Feed

Recent Story

Featured News