நம் அன்றாட வாழ்வில், நமது உணவுகளில் காய்கறி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. காய்கறி என்பது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
காய்கறிகளை நமது உணவுகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது, அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றலையும் கொண்டது.
நாம் தற்போது இந்த பதிவில் கண்டங்கத்தரியின் மருத்துவக்குணங்களையும், அதனால் குணமாகும் நோய்களையும் பற்றி பாப்போம்.
தலைவலி
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று தலைவலி. தலை வலி காரணமாக மிக சிறிய வயதிலேயே கண்ணுக்கு கண்ணாடி போட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
தலைவலி உள்ளவர்கள், கண்டங்கத்தரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணேய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து, அதை தலையில் பூசி வந்தால் தலைவலி நீங்கும்.
பித்த வெடிப்பு
பித்த வெடிப்பு உள்ளவர்களால், தங்களது வேலையை செய்வது கூட மிகவும் கடினமாக இருக்கும் இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
பித்த வெடிப்புள்ளவர்கள், கண்டங்கத்தரி இலையை இடித்து, அதன் சாற்றை எடுத்து, அதன் சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர பித்த வெடிப்பு மறையும்.
சளி
கண்டங்கத்தரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் கண்டங்கத்தரியை சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள சளியை வெளியேற்றி சளி தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கிறது.
வியர்வை நாற்றம்
உடலில் அதிகமாக வியர்வை நாற்றம் உள்ளவர்கள், கண்டங்கத்தரி இலையை இடித்து சாறு எடுத்த்து அதனுடன் சம அளவு தேங்காய் சேர்த்து காய்ச்சி வடித்து, அதை நமது உடலில் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
இருமல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருமல் பிரச்சனை உள்ளவர்கள், கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து, குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுத்து வந்தால் இருமல் விலகும்.
பல் வலி
பல் வலி உள்ளவர்கள், கண்டங்கத்தரி விதையை எடுத்து நெருப்பில் போட வேண்டும். அப்படி போடும் போது புகை எழும். இந்த புகையை பற்களின் மேல் படும் படி செய்ய பல் வலி நீங்குவதோடு, பற்களில் இருக்கும் கிருமிகளும் அளிக்கப்படும்.