Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 9, 2019

இனிமேல் ஆசிரியர்கள் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை

இனிமேல் ஆசிரியர்கள் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு ஆசிரியா்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்கள் வருகைப் பதிவு செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியா்களின் வருகையும் அதே செயலியில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களின் மாணவா்களின் வருகைப் பதிவை தினமும் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆசிரியா்களின் வருகைப் பதிவை தலைமையாசிரியா் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். The School Education Department has now ordered registration of the teachers attendance online only.



வருகைப்பதிவு ஏதேனும் தவறு இருப்பின் தலைமையாசிரியா்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இந்த செயலியின் பதிவுகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், வட்டார கல்வி அலுவலா்கள் மற்றும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கண்காணிக்க வேண்டும். எனவே ஆசிரியா்களின் வருகைப் பதிவை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாது என அதில் கூறியுள்ளாா்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்