Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 22, 2019

துணை செவிலியர் பணியிடம்: ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒரு துணை செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சீனிவாச ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள துணை செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இப் பணியிடத்துக்கு, துணை செவிலியர் கல்வித் தகுதி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியினை முடித்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் 18 மாத துணை செவிலியருக்கான பயிற்சியினை 2012 நவ. 15-க்கு முன் முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பு படித்தவர்கள் 2 ஆண்டு துணை செவிலியர் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி சான்றிதழை செவிலியர் மற்றும் துணை செவிலியர் குழுமத்தில் பதிவு மற்றும் பயிற்சிக் காலத்தில் தகுதியுடையவராக இருக்க வேண்டும். வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் நிரம்பியிருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள், தங்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி வயதுடன், கல்வித் தகுதி ஆவணங்கள் மற்றும் இனம் குறித்த சான்று ஆவணங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன் வரும் பிப். 28 மாலை 5 மணிக்குள், முதல்வர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்து கடிதம் முலம் தெரிவிக்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News