Wednesday, February 20, 2019

ஆன்லைன் மூலமாக எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் துவங்குவது எப்படி ?

SBI Fixed Deposit Online : எஸ்.பி.ஐ தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கிவருகிறது. நிலையான வைப்பு எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டை ஆன்லைன் மூலமாக துவங்கலாம்.



இதற்காக இனி வங்கி அலுவலகங்களுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பப்பட்ட நாட்களுக்கு ஏற்ப நிலையான வைப்பு கணக்கினை தொடங்கலாம்.


7 நாட்களில் துவங்கி 10 வருடங்கள் வரை முதிர்வு காலம் கொண்ட விதவிதமான ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீம்கள் உள்ளன. எஸ்.பி.ஐ இணையத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீம் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
SBI Fixed Deposit Online : ஆன்லைன் வழியாக எஸ்.பி.ஐயில் எஃப்.டி கணக்கை துவங்குவது எப்படி ? இண்டெர்நெட் பேங்கிங் பயன்படுத்தினால் நீங்கள் நேரடியாக உங்களின் யூஸர் நேம் பயன்படுத்தி நீங்கள் எஃப்.டி அக்கௌண்ட்டை ஓப்பன் செய்யலாம். அல்லது நேரடியாக onlinesbi.com, sbi.co.in. இணையத்தில் எஃப்.டியை ஓப்பன் செய்யலாம்.


உங்களின் லாக்-இன் க்ரெடன்சியல் கொடுத்து ஆன்லைன் பேக்கிங்கை ஓப்பன் செய்யவும். ஹோம் பேஜ்ஜில் வரும் டாப் மெனுவில் இ-பிக்சட் டெபாசிட் என்ற மெனுவை க்ளிக் செய்யவும். அதில் ஃபிக்ஸட் டெபாசிட்ஸ், ஃபிக்ஸட் டெபாசிட்ஸ் இன்கம் டேக்ஸ் சேவிங்க்ஸ் ஸ்கீம் மற்றும் மல்டி ஆப்சன் டெபாசிட் ஆப்சன்கள் இருக்கும்.
அதில் உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அதில் நீங்கள் செலுத்த விரும்பும் பணத்தின் மதிப்பினை குறிப்பிட வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒருவர் 1000 ரூபாய் கொண்டு ஃபிக்சட் டெபாசிட்டை துவங்கலாம்.


அந்த பணத்திற்கான வட்டி மாதா மாதம், மூன்று மாதங்கள், 6 மாதங்கள் என்ற காலக்கட்டத்தில் போடப்படும். 10,000 ரூபாய்க்கு மேலான வைப்பு தொகை கொண்டிருக்கும் மூத்த குடிமக்களின் கணக்கில் கூடுதலாக 0.25% வட்டி உயர்த்தப்படும்.

Popular Feed

Recent Story

Featured News