மினரல்களும் வைட்டமின்களும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றன. இதில் குறைபாடு ஏற்படும்போது பல நோய்கள் உண்டாகின்றன. சிலருக்கு சிறுவயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படவும் இதுதான் காரணம்.
பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும்.
சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன.
எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். உடலில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக தானாக நினைத்துக்கொண்டு சிலர், மருத்துவரின் ஆலோசனையில்லாமல், அதிகளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். அது மிகவும் தவறானது.