Saturday, February 16, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிப்பு..!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, சிடிஇடி என்ற தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளதுள்ளது.




மத்திய அரசின் ஆசிரியராக விரும்புபவர்கள் Central Teacher Eligibility Test (CTET) தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 2019 -ஆம் ஆண்டுக்கான இந்த தகுதித் தேர்வு ஜூலை.7 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சிபிஎஸ்இ நடத்தும் இந்த தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுத் தாள் : இரண்டு தாள்களைக் கொண்ட இந்த தேர்வுக்கு 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றையும், 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தாள் இரண்டையும் எழுத வேண்டும். தேர்வை தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வு எழுதலாம்.



இந்த தேர்வு இந்தியா முழுவதும் 97 நகரங்களில் நடைபெறுகிறது. விண்ணப்பக் கட்டணம்: ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.700, இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ.1200 கட்டணமும் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.350, இரண்டு தாள்களும் எழுத விரும்புவர்கள் ரூ.600 கட்டணமும் செலுத்தவேண்டும். தேர்வு மையம்: தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விண்ணப்பிக்கும் முறை: www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2019 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2019 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.03.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Popular Feed

Recent Story

Featured News