Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை: வானிலை மைய இயக்குனர் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி சுமார் 7 மணி 2 நிமிட அளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவி பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வால் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என கூறினார். இந்த நிலநடுக்கம் கடல் பகுதிகளில் நிலவியதால் பெரிய பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நில அதிர்வுகள் குறித்த முதற்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போது கிடைத்ததாகவும், விரிவான தகவல்கள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று சென்னையை மையப்புள்ளியாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றும், சென்னைக்கு வெகுதொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், மக்கள் அச்சப்படவேண்டாம், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம், அதனை நம்பவேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News