Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 23, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22 முதல் 30-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தபோராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர்கள் வரை பங்கேற்றதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி நிலைமையை தமிழக அரசு சமாளித்தது. இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத்துக்கு 6 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகும்.

ஆனால், போராட்டத்தின் போது தங்கள் வேலை நேரத்தை தாண்டி பெரும்பாலான பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்தனர். அவ்வாறு வேலை செய்த நாட்களுக்கு மாற்று விடுப்பு வழங்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை 6 மாத காலத்துக்குள் மாற்று விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News