எருக்கச் செடி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடி தான். இந்த செடி சாதாரணமாக சாலை ஓரங்களிலும், வெளி ஓரங்களிலும் வளரக் கூடிய ஒரு செடி.
எருக்கச் செடியின் பூக்களை வைத்து நமது சிறு வயதில் விளையாடுவதுண்டு. விளையாட்டிற்காக பயன்படுத்திய இந்த செடியில் உள்ள மறுத்து குணங்கள் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் எருக்கச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
இருமல்
இருமல் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த செடியின் இலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் எருக்கச் செடியின் இலையை பறித்து காய வைக்க வேண்டும்.
காய வைத்த எருக்க இலையை எரித்து அதிலிருந்து வரும் புகை சுவாசித்தால் இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை நீக்கி குணமாக்கும்.
நெஞ்சு மற்றும் வயிற்று வலி
ஒரு வயதிற்கு மேல் படிப்படியாக நோய்கள் உருவாகிறது. அதில் நெஞ்சு வலி பலருக்கு ஏற்படுகிறது. சில வேளையில் இந்த நெஞ்சு வலி அதிகமான வேலை பளுவினாலும் ஏற்படுகிறது. நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலியை போக்க எருக்கச் செடி ஒரு சிறந்த மருந்தாகும்.
இருக்க செடியின் இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி விடும்.
புண்கள்
எருக்கச் செடியின் இலைகளை நன்கு காய வைத்து, அதை பொடித்து, புண் உள்ள இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.
சொறி சிரங்கு
சொறி சிரங்கு உள்ளவர்களுக்கு எருக்கச் செடியின் இலைச்சாறு நல்ல மருந்தாகும். எருக்கச் செடியின் இலைச்சாறுடன், மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெயில் வேக வைத்து, அதை தோலில் ஏற்படும், படை சிரங்கு போன்றவற்றிற்கு தடவினால் இதில் இருந்து விடுதலை பெறலாம்.
பாம்பு விஷம்
பாம்பு கடித்தவர்கள் உடனடியாக எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.இதனை சாப்பிட்ட உடன் விஷம் இறங்கி விடும்.
குதிங்கால் வீக்கம்
குதிங்கால் வீக்கம் உள்ளவர்கள் எருக்க இலையில், பழுத்த இலையை எடுத்து, குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்து வர வீக்கம் சரியாகும்.