Sunday, February 3, 2019

ஆசிரியர்கள் போராட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்..! பள்ளி மாணவ-மாணவிகள் எடுத்த அதிரடி முடிவு..!




திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்தி வந்த ஆசிரியர்கள் சிலர், சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட் டனர். இதனால் தங்களுக்கு நடத்தப்பட்ட பாடங்கள் நிலுவையில் உள்ளதாகவும், புதிய ஆசிரியர்களால் மீதமுள்ள பாடத்தை, தங்களுக்கு புரிதலாக நடத்த முடியாது எனவும் மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். எனவே, மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை இதே பள்ளிக்கு மாற்றித் தர வேண்டும்; என கோரிக்கை எழுப்பினர். பல இடங்களில் வகுப்பை புறக்கணித்த மாணவிகள் பள்ளிக்கு வெளியே அமர்ந்தனர்.



ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பள்ளிக்குள் சென்ற மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டன். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் இதே பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்களது வகுப்பறைக்குச் சென்றனர். அதே போல விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக் கத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 500 மாணவிகள் படித்து வருகின்றனர்.



இந்த உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தில் கலந்து கொண்டார். அவரை இப்பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், அந்த ஆசிரியரை மீண்டும் இப்பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்திய மாணவிகள் பள்ளிக்கு உள்ளே செல்லாமல் வகுப்பை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு எடுக்கும் நடவடிக்கை யில் நாம் தலையிட முடியாது என்று கூறி பள்ளி மாணவர்களை சமாதானப்படுத்தினார்.

Popular Feed

Recent Story

Featured News