Monday, February 18, 2019

உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதத்தில் தமிழகத்துக்குதான் முதலிடம். தமிழகத்தை பொறுத்தவரை 509 கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது.

இக்கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையை கூடுதலாக்க அனுமதி பெற்றுள்ளனர். இதனால் நிகர்நிலை பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் விரும்புவதாலும், பொறியியல் கல்லூரிகளில் ஒரு சில இடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து காலியிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News