Sunday, February 17, 2019

வெங்காயமும், வெள்ளைப் பூண்டும்... டிவிகளில் களை கட்டும் சித்த மருத்துவம்

சாதாரண தலைவலி என்று டாக்டரிடம் போனால் கூட ஆயிரக்கணக்கில் அழ வேண்டியிருக்கிறது. வீட்டில் பாட்டி இருந்தால் நொச்சி இலையை போட்டு கொதிக்க வச்சு ஆவி பிடிச்சா எப்பேர்பட்ட தலைவலியும் காணாம போயிரும் என்று ஐடியா சொல்லி பணத்தை பாதுகாத்து விடுவார். இன்றைக்கு வயதானவர்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருப்பது அரிதாகி வருவதால், சித்த மருத்துவ வேலைகளை சில டிவி சேனல்கள் செய்து வருகின்றன.

சன்டிவி, ஜீ தமிழ், வேந்தர் டிவி என பல சேனல்களும் காலை நேரங்களில் ஏதாவது ஒரு மூலிகையை கசக்கி, பிழிந்து கசாயம் வைக்க கற்றுக்கொடுக்கின்றன. பல்வலியோ, வயிற்று வலியோ வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்தலாம் என்று எளிதாக கற்றுக் கொடுப்பதால் இந்த நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் என பல பெயர்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சித்த மருத்துவம்தான் நிகழ்ச்சிக்கான கரு. சித்த மருத்துவர் சொல்லச்சொல்ல மூலிகை இலைகளை உடனுக்குடன் இடித்து சாறு பிழிந்து அதை காய்ச்சி கசாயம் தயாரிக்கும் அழகே தனிதான்.



பாரம்பரி மருத்துவம்

உணவே மருந்து ,மருந்தே உணவு என்னும் பழமொழிக்கேற்ப இந்நிகழ்ச்சியில் நமக்கு உண்டாகும் நோய்களை இயற்கையான முறையில் நாம் அன்றாட உண்ணும் உணவின் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது என்று விளக்கப்படுகிறது.

மருத்துவ குறிப்புகள்

இந்நிகழ்ச்சியில் கூறப்படும் மருத்துவ குறிப்புக்கள் அனைத்தும் எளிய முறையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருப்பது சிறப்பம்சமாகும். தமிழ் நாட்டில் தலைசிறந்த சித்த மருத்துவர்களில் ஒருவரான ராஜமாணிக்கம் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை கூறி நேயர்களை கவர்ந்தார்.

பயனுள்ள குறிப்புகள்



எளிய முறையில் அனைவரும் நலமான வாழ்க்கை வாழ இந்நிகழ்ச்சியில் பல பயனுள்ள குறிப்புகள் வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 500 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பானது.


நாட்டு மருத்துவம்

சன் தொலைக்காட்சியில் சித்த மருத்துவர் சக்தி சுப்ரமணியம், கூறும் நாட்டு மருத்துவ குறிப்புகளும் நேயர்களிடையே வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உள்ளது. காலை 8.30 மணியாகிவிட்டாலே போதும், டிவி முன்பு அமர்ந்து நாட்டு மருத்துவ குறிப்புகளை பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.

மூலிகை மருத்துவம்

வேந்தர் டிவியில் சித்த மருத்துவர் ராஜ மாணிக்கம் நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் மற்றும் நாம் தினம் தோறும் பார்க்கும் நம்மை சுற்றியுள்ள மூலிகை பொருட்களை கொண்டு பல வித நோய்களை தீர்ப்பது எப்படி?என்பதை எளிமையாக விளக்கி செய்முறை விளக்கத்தையும் கொடுக்கிறார்.



சவாலான நோய்களுக்கும் மருந்து

சாதாரண குழந்தைக்கு ஏற்படும் இருமல் ,பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலி ,மாதவிடாய் கோளாறுகள் மற்றும் பெரிய நோய்களான புற்று நோய் ,சொரியாசிஸ் போன்ற அனைத்து நோய்களுக்கு நம்மிடமே மருந்து உண்டு என்றும் , இதை பார்க்கும் நேயர்கள் தாங்களே மருந்தை தயாரித்து பயன் படுத்தும் வகையில் எளிமையாக செய்து காண்பிக்கிறார்.

வீட்டிற்கு வரும் மருத்துவர்கள்



எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் மருத்துவமனையை நாடாமால் மருத்துவரை அணுகாமல் நாமே தயாரித்து பயன் படுத்தும் வகையில் இந்த "மூலிகை மருத்துவம் "நிகழ்ச்சி அமைந்து நேயர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வேந்தர் டிவியில் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது மூலிகை மருத்துவம்.

Popular Feed

Recent Story

Featured News