Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

தொழிற்பயிற்சி பள்ளிகள் துவங்க ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி

தொழிற்பயிற்சி பள்ளி அங்கீகாரங்களுக்காக இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொழிற் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தனியார் தொழிற்பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள், டிடிசிதொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இத்தகயை தொழிற்பயிற்சிகள் வழங்கிட புதிதாக தொழிற்பயிற்சிகள் துவங்குவதற்கு அங்கீகாரம் வழங்கவும் ஏற்கனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அங்கீகார நீட்டிப்புக்கு ஜனவரி 2 முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பங்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் வழங்கப்பட்டு வந்தன. 2017- -2018 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட இணையதளம் மூலம் 2019- -2010ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிக்கான அங்கீகார நீட்டிப்பு,
புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் துவங்கிட ஜனவரி 11 முதல் விண்ணப்பிக்கலாம். புதிய பள்ளிகளுக்கு ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள தொழிற்பயிற்சி பள்ளிகள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என,மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News