Sunday, February 17, 2019

8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி


எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவீதப் பங்குத் தொகையுடன் மத்திய அரசின் ஸ்மார்ட் மடிக்கணினிகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபி அருகே காசிபாளையத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 1.50 கோடி மரக்கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகிதப் பங்குத் தொகையுடன் மத்திய அரசின் ஸ்மார்ட் மடிக்கணினிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் புதிதாக 750 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேள்வித் தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குரிய மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வெழுத, அருகிலேயே பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Popular Feed

Recent Story

Featured News