Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - நடராஜ்: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள, பார்வை குறைபாடுடைய, மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர், செங்கோட்டையன்: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் நடந்த, தகுதி தேர்வுகளில், 417 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், 239 பேர் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.நடராஜ்: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பணி நியமனம் நடந்து வருகிறதா?அமைச்சர், செங்கோட்டையன்: இட ஒதுக்கீட்டின்படி, பணி நியமனம் நடந்துள்ளது.தி.மு.க., - பிச்சாண்டி: மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்குமா?

பல பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.அமைச்சர், செங்கோட்டையன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Popular Feed

Recent Story

Featured News