காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.