Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 22, 2019

இண்டெர்நெட் Net Banking பேங்கிங் பாஸ்வேர்ட் செட் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை இவை தான்!

எந்த ஒரு வங்கியில் கணக்கு துவங்கினாலும், மொபைல் பேங்கிங், இண்டெர்நெட் பேங்கிங் போன்ற வசதிகளை உருவாக்கித் தருவது வங்கிகளின் வழக்கம். அப்போது வங்கி கணக்கு துவங்குபவர்களின் மனதில் ஓடும் முக்கியமான கேள்வி, ஒரு பாஸ்வேர்டை எப்படி செட் செய்வது என்று தான். உங்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறது இந்த கட்டுரை :






ஆங்கில அகராதியில் இல்லாத ஒரு வார்த்தையை தேர்வு செய்யுங்கள் உங்களின் பெயர், பிறந்த தேதி, வாகன ரெஜிஸ்ட்ரேசன் நம்பர் ஆகியவற்றை எப்போதும் பாஸ்வேர்டாக தேர்வு செய்யாதீர்கள். முடிந்த வரை உங்களின் பாஸ்வேர்ட்களை மனனம் செய்து கொள்ளுங்கள். எங்கும் எழுதி வைக்க வேண்டாம். உங்களின் பாஸ்வேர்டை யாரிடம் சொல்ல வேண்டாம். வங்கிகளில் இருந்து அழைக்கின்றோம் என்று வரும் அழைப்புகளில் கேட்டாலும் நீங்கள் பாஸ்வேர்ட் எதையும் தர வேண்டாம்.



உங்களின் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது நலம். சிஸ்டம் ஜெனரேட் செய்த பாஸ்வேர்ட் மற்றும் யூஸர் நேமை மாற்றுவது நலம். உங்களின் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். ஆனால் யூசர் நேம் அப்படியாக இருப்பது இல்லை.

Popular Feed

Recent Story

Featured News