PM Kisan திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6000 (2000+2000+2000) ரூபாய் உதவித்தொகை இம்மாத 24-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள PM Kisan திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கான வருடத்திற்கு 6000 ரூபாய் (2000+2000+2000) உதவித்தொகையினை விவசாயிகள் பெறுவதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்களிடன் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியுடைய விவசாயிகளுக்கு உதவிதொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த உதவி தொகையின் முதல் தவனை வரும் பிப்., 24 துவங்கி மார்ச் 31-ஆம் நாளுக்கு முன்னதாக மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளின் வாக்குகளை குறிவைத்து இந்த திட்டம் அதிவேகத்தில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
PM Kisan திட்டம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விளக்கங்கள் பின்வருமாறு:
ஒரு குடும்பத்தின் (தந்தை, தாய் மற்றும் மகன்கள், மகள்கள்) அனைவர் பெயர்களில் உள்ள சாகுபடி நிலங்களும் சேர்த்து 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கர் மிகாமல் இருக்க வேண்டும்.
தரிசுகளகாக உள்ள நிலங்களுக்கும் மனை என வகைபடுத்த பட்ட நிலங்களுக்கும் இத்திட்டத்தில் உதவி கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பெயரில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். தற்சமய அறிவிப்பின்படி நில உரிமை முக்கிய ஆவணங்களான பட்டா சிட்டா பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது எனவே ஒத்தி குத்தகை வாரம் கந்தாயம் போன்ற பல்வேறு வகை இனங்களில் மற்றவர் நிலத்தை சாகுபடி செய்பவர்களுக்கு இது பொருந்தாது. முன்னாள் இந்நாள் மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற சட்டப்பேரவை சட்டசபை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் (தொகுதி 4 வகை அரசு ஊழியர்களை தவிர) மற்றும் ஓய்வு பெற்று மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வு ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் பதிவுபெற்ற எஞ்சினியர்கள் டாக்டர்கள் ஆடிட்டர்கள் வழக்கறிஞர்கள் சென்ற ஆண்டு வருமான வரி செலுத்தியவர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் எண் உள்ளது நமது அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் வேறு கிராமத்தில் குடும்பத்தின் வேறு குடும்ப உறுப்பினர் பெயரில் நிலங்கள் வைத்திருந்தாலும் சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட உள்ளூர் வெளியூர் நில உரிமையாளர்கள் விவசாய கணக்கெடுப்பு விவரங்கள், குடும்ப அட்டையில் இணைந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள், வாக்காளர் பட்டியல் குடும்ப வரிசை எண் மற்றும் ஆதார் விவரங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் விவரங்கள், பத்திரப்பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட ஆதார் விவரங்கள், போன்ற எந்த வகையிலாவது நீங்கள் தவறாக நில விவரங்களை மறைத்து விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பம் நிச்சயமாக கணினி மென்பொருள் மூலம் கண்டறியப்பட்டு தானாக நிராகரிக்கப்பட்டுவிடும்.
மேலும் விவசாயிகள் விண்ணப்பிக்கும் பொழுது தான் இந்த திட்டத்திற்கு உண்டான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் எந்தவிதமான விவரங்களையும் மறைக்கவில்லை விவரங்கள் தவறு என தெரியவரும் பட்சத்தில் நான் பெற்ற நிதி தொகையினை உரிய சட்ட நடவடிக்கையின் படி திருப்பி செலுத்துவேன் என உறுதி கூறுகிறேன் என கூறி உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் இட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்க தேவையானவை:
விண்ணப்பம் மற்றும் உறுதி மொழி படிவத்தினை கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்று நகல் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கும் பட்சத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
அத்துடன் விண்ணப்பிக்கும் நபரின்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆதார் நகல்
வங்கி புத்தக நகல் ( முடிந்த வரை தேசிய அங்கிகாரம் பெற்ற IFSC MICR எண்களை சரியாக கொண்ட பெரிய நிறுவன வங்கி கணக்குகள் மட்டும்)
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை நகல்
உபயோக நிலையிலுள்ள அலைபேசி எண்
தங்களது அனைத்து புல எண்களுக்கான பத்திரம் நகல், EC நகல் (முக்கியமாக கூட்டு பட்டா இனங்களில் ஒருவரது பாக வீதத்தினை கண்டறிய)
மேற்கண்ட ஆவணங்களை சரியாக கணினியில் பதிவேற்றம் செய்யும் வகையில் தெளிவாக ஜெராக்ஸ் நகல் எடுத்து விண்ணப்பத்துடன் விண்ணப்பத்திலும் உறுதிமொழி படிவத்திலும் கையொப்பமிட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி முதல் மூன்று நாட்களுக்குள் வரும் விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் மட்டும் முதல்கட்ட பட்டியலில் சேர்க்க சரிபார்ப்பு மற்றும் பரிசீலனை செய்யப்படும். மற்றவை தகுதியிருப்பின் அடுத்த கட்ட பட்டியல் தயார் செய்யும்போது சேர்க்கப்படும்
மேலும் விவரங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் அவர்களை அணுகி தங்களது சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம் இதுதொடர்பான விரிவான விளக்கங்கள் அனைத்து செய்தித்தாள்கள் தொலை தொடர்பு சாதனங்கள் தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றிலும் உரிய முறையில் அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.