Wednesday, March 13, 2019

1 முதல் 9-ம் வகுப்புக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு?

மக்களவை தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப். 10-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.



தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்குச் சாவடி பணிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கிடையே தேர்தல் முடிந்த அடுத்த நாளான ஏப்ரல் 19-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 30-ம்தேதி தொடங்கி ஏப். 6-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து மதிப்பெண்கள் அடங்கிய குறுந்தகடுகளை ஏப். 9-க்குள் தேர்வுத்துறை இயக்குநரகத்திடம் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



இதேபோல், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளை ஏப்ரல் 10-க்குள் முடிக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கானமுன்னேற்பாடுகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருவ தாக துறை அதிகாரிகள் தெரி வித்தனர்

Popular Feed

Recent Story

Featured News