Saturday, March 30, 2019

ஐஐடி-யில் பல்வேறு பாடப்பிரிவில் எம்.டெக். படிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.10




சென்னை ஐஐடி-யில் பல்வேறு பாடப்பிரிவுகளில் எம்.டெக் படிப்பில் சேர ஏப்ரல் 10-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ- டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினீ யரிங், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல், கணிதம், இயற்பியல், மெக்கானிக் கல், ஓசன் இன்ஜினீயரிங் உள்ளிட்ட 13 துறைகள் மூலமாக பல்வேறு பாடப் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் எம்.டெக் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


இப்படிப்புகளுக்கு கல்வி உதவித் தொகையும் பெறலாம். திறமையான மாணவர்கள், எம்.டெக் சேர்ந்து ஓராண்டுக்குப் பிறகு அப்படிப்பை பி.எச்டி-யாக மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. பெரிய தொழிற்சாலைகள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் புரா ஜெக்ட்கள் செய்யவும் எம்.டெக் படிப்புகள் வாய்ப்பு அளிக்கின்றன. இதில் சேரும் மாணவர்களுக்கு சிறந்த அடிப்படை பயிற்சி அளிக்கப்படுவதோடு விருப்பமான பாடப் பிரிவுகளை தேர்வு செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு எம்.டெக் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு (http://mtechadm.iitm.ac.in) கடந்த 6-ம் தேதி தொடங்கியது.


பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 10. மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு அல்லது நேர்காணல் ஏப்ரல் 27-ல் நடைபெறும். தேர்வு செய்யப்படுவோர் ஜூலை 22-ல் சேர்க்கைக்காக ஆஜராக வேண்டும். வகுப்புகள் ஜூலை 29-ல் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News