Thursday, March 7, 2019

12-வது முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா?




மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.



தேர்வு வாரியம் : பணியாளர்கள் தேர்வாணையம்

மேலாண்மை : மத்திய அரசு

வயது : 18 முதல் 27 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100

தேர்வு செய்யும் முறை :

மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதலில் 200 மதிப்பெணுக்கு ஆன்லைன் தேர்வு. இதில், தவறாக பதியப்படும் ஒவ்வொரு விடைகளுக்கும் 0.5 மதிப்பெண் கழிக்கப்படும். இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து டைபிங் தேர்வுகளும் நடைபெறும்.



விண்ணப்பிக்கும் முறை :

1 : விண்ணப்பதாரர்கள் ssc.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணைதளம் செல்ல வேண்டும்.

2 : முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள SSC CHS 2019 என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.

3 : முதன்முறையாக விண்ணப்பிப்போர் புதிதாக பதிவு செய்து பதிவு எண்ணை பெற வேண்டும்.

4 : தொடர்ந்து, உள்நுழைய பதிவு எண்ணை பயன்படுத்த வேண்டும்.

5 : சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்ய கடைசி நாள் : 05.04.2019

தேர்வு நடைபெறும் தேதி : ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 26 வரையில்

இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய ssc.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH அல்லது https://ssc.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_chsl_05032019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Popular Feed

Recent Story

Featured News