Tuesday, March 12, 2019

ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்தம்!


மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குரூ.2,000 வழங்கும் நிதியுதவித் திட்டம் தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த தொகையை செலுத்த, மாவட்டவாரியாக ஆட்சியர் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு நிதியுதவியும் வழங்கப்பட்டு வந்தது.


இதேபோல், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன்படி,5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் திட்டமும் அன்றைய தினமேதமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.2,000 என்ற முறையில் 3 தவணையாக வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், முதற்கட்டமாக விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு,தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனே அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களான ரூ.2,000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News