Tuesday, March 5, 2019

பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். பணிக்கொடை தொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் கடந்த 2008–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன.


அதனை அடுத்து 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த 7–வது சம்பள கமிஷன் அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் தனியார் துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த சம்பள கமிஷன் பரிந்துரை செய்து இருந்தது.


இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பணிக்கொடை தொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News