Thursday, March 7, 2019

349 காலியிடத்திற்கு தேர்வு டி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்'


அரசு துறைகளில், பல்வேறு பதவிகளுக்கு, காலியாக உள்ள, 349 இடங்களுக்கான தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இளநிலை பகுப்பாய்வாளர், தொல்லியல் ரசாயனர், 24; சுகாதார பணியில், மக்கள் கருத்து கேட்பாளர், 3; கால்நடை துறை புள்ளியியல் ஆய்வாளர், 13; உதவி சிறை அலுவலர், 30; தோட்டக்கலை உதவி இயக்குனர், 279 என, 349 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.


இந்த தேர்வுகளின் விடை திருத்தம் முடிந்து, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு நியமன விதிகளின் படி, முடிவுகள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News