Thursday, March 7, 2019

மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?


பெண்கள் தினம் என்பது கடந்த 20-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவின் தொழிலாளர்கள் இயக்கங்கள் கொண்டு வந்த ஒரு கொண்டாட்ட நாள் ஆகும். வட அமெரிக்கப் பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்கான தினம் பணி இடங்களில் கொண்டாடப்பட்டன.

அதன் பின்னர் 1909-ம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலாக பிப்ரவரி 28-ம் தேதி அந்நாட்டின் தேசிய பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதுதான் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்ட பெண்கள் தினம். ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், பணியிட நிபந்தனைகளை நிறைவேற்றக்கோரி 1908-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மிகப்பெரும் போராட்டம் நடத்தினர்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் நடத்திய அந்தப் போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போராடிய பெண்களை கவுரவிக்கும் வகையிலேயே பெண்கள் தினம் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மார்ச் 19-ம் தேதியை பெண்கள் தினமாக அறிவித்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்யாவில் பெண்கள் இணைந்து பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

க்ரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் அப்பெண்கள் கோரிய ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்ததால் 1917-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின்னர் 1975-ம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐநா கொண்டாடி வருகிறது.

Popular Feed

Recent Story

Featured News