Wednesday, March 6, 2019

பேங்கில் இனி இதுதான் உங்களுடை மினிமம் பேலன்ஸ்.. பிரபல வங்கிகளின் அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கை, சராசரி மாதாந்திர தொகையில் வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

பொது வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி ஆகிய வங்கிகள் அவர்களது சராசரி தொகையை நிர்ணயம் செய்து விட்டன.


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) மெட்ரோ மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 'சேவிங்ஸ் பேங்க்' எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 3000 ரூபாயை தங்களது கணக்கில் சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
சிறு நகரங்களில் வசிப்போருக்கு 2000 ரூபாயும், கிராமங்களில் வசிப்போர் 1000 ரூபாயும் சேமிப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இதன் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பஞ்சாப் நேஷனல் பேங்க் இந்த வங்கியில் சேவிங்ஸ் பேங்க் கணக்கு வைத்திருக்கும், மெட்ரோ, நகர்புற மற்றும் சிறு நகர வாடிக்கையாளர்கள் 2000 ரூபாயை, குறைந்த பட்ச காலாண்டு சேமிப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும். கிராமங்களில் வசிப்போர் குறைந்த பட்சமாக 1000 ரூபாயை சேமிப்புத் தொகையாக மெயிண்டைன் செய்ய வேண்டும் என pnbindia.in தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைப் பொறுத்தவரையில் மெட்ரோ மற்றும் நகரங்களில் வசிக்கும் 'சேவிங்ஸ் பேங்க்' வாடிக்கையாளர்கள் 10000 ரூபாயை தங்களது சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.சிறு நகரங்களில் வசிப்போருக்கு 5000, கிராமத்தினருக்கு 2000 மற்றும் பின் தங்கிய கிராமங்களில் வசிப்போருக்கு 1000 ரூபாய் என பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு icicibank.com என்ற முகவரியை அணுகவும்.


எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. கட்டணம் விவரம் இங்கே! எச்டி.எஃப்.சி இங்கு மெட்ரோ மற்றும் நகர்புற வாடிக்கையாளர்கள் 10000 ரூபாயை குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.சிறுநகர வாடிக்கையாளர் 5000 ரூபாயையும், கிராம புற வாடிக்கையாளர்கள் 2500 ரூபாயும் தங்களது சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டில் பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என hdfcbank.com தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு 'ஜீரோ பேலன்ஸ்' அக்கவுண்ட்களுக்குப் பொருந்தாது.

Popular Feed

Recent Story

Featured News