Friday, March 15, 2019

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு





புதுக்கோட்டை,மார்ச்.14 : புதுக்கோட்டை மாவட்டத்தில் 23,500 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதினார்கள்.



அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 7626 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.இதில் 7483 மாணவர்கள் தேர் வெழுதினார்கள்.143 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9409 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 9226 மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.183 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை.

இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 6716 மாணவர்கள் தேர்வுக்கு பதிவுசெய்திருந்தார்கள்.இதில் 6500 மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.216 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.




தனித்தேர்வு எழுத 312 பேர் பதிவு செய்திருந்தனர்.இதில் 291 பேர் தேர்வினை எழுதினார்கள்.21 பேர் தேர்வு எழுத வரவில்லை.


முன்னதாக தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது வினாத்தாள் வழங்குதல் ,தேர்வு கண்காணிப்பு,அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா உடன் இருந்தார்.


தேர்வானது மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி முடிவடைகிறது.

தேர்வுப்பணியில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் 107 பேர்,துறை அலுவலர்கள் 107 பேர்,கூடுதல் அலுவலர்கள் 2 பேர்,அறை கண்காணிப்பாளர்கள் 1361பேர்,பறக்கும் படையினர் 185 பேர் மற்றும் வழித்தட அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்..



அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 36 தேர்வு மையங்களும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 36 தேர்வு மையங்களும் ,இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 30 மையங்கள் என மொத்தம் 107 மையங்கள் உள்ளன.

Popular Feed

Recent Story

Featured News