Thursday, March 7, 2019

காதுவலி வந்தால் செய்யக் கூடாதவை..!!


* நம்முடைய காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. அப்படி சுரப்பதனால் காதுக்குள் சேருகின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேல் தானாக வெளியே வந்துவிடும். அதனால் காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருள்களையும் உள்ளு விட்டு சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்யக்கூடாது.



* நம்முடைய காதுகள் 80 தல் 85 டெசிபல் வரையிலும் இருக்கின்ற சத்தத்தைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் சத்தம் நம்முடைய செவிப்பறைகளை எட்டுகிற போது, அந்த அதிக சத்ததத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சவ்வு கிழிந்துவிடும்.



* சிலர் காதில் இயர்போளை எப்போதும் மாட்டிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ பாட்டு கேட்டுக் கொண்டே அப்படியே இயர்போனோடு தூங்கிவிடுவார்கள். அதிக சத்தம் வெளிவரும் வீடியோ கேம், படம் பார்ப்பது, செல்போன் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை காதுகளில் பெரும் வலியை ஏற்படுத்தும். அதனால் ஒரே காதில் வைத்துப் பேசக்கூடாது. அவ்வப்போது காதுகளை மாற்றி மாற்றி பேச வேண்டும்.



* சிலர் காதுவலி வந்தால் தேங்காய் எண்ணெய் இல்லையென்றால் நல்லெண்ணெயைக் காய்ச்சி வெதுவெதுப்பான இருக்கும்போது காதுக்குள் விடுவார்கள். இதை செய்யவே கூடாது. முதலில் காதுவலி எதனால் வந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளாமல் எண்ணெயை ஊற்றினால் அது வீண் விபரீதமாகிவிடும்.



* இதுவே காதில் ஏதேனும் பூச்சி நுழைந்துவிட்டால் சில சொட்டு தேங்காய் எண்ணெயையோ அல்லது நல்லெண்ணெயையோ விட்டால் பூச்சி இறந்துவிடும். ஆனால் எண்ணெயை சூடுபடுத்தி ஊற்றக்கூடாது. தலையை லேசாக சாய்த்து வைத்திருந்தாலே பூச்சி தானாக வெளியே வந்துவிடும்.

Popular Feed

Recent Story

Featured News