Saturday, March 30, 2019

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் மனநிறைவுடன் மேற்கொள்ள வேண்டும்  தேர்வுத் துறை இயக்குநர் வலியுறுத்தல் 

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் அனைவரும் மன நிறைவுடன் மேற்கொள்ள வேண் டும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர் களுக்கு வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பொதுமக்களின் நம்பிக்கை தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரி கள் மீது பொதுமக்கள் கொண் டுள்ள நம்பிக்கையைக் காப்பாற் றுவது நம் அனைவரின் முக்கிய கடமையாகும். எனவே, எல்லோரும் அவரவர் பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதி அதன் முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு சரியானத் தேர்வு முடிவுகளை வழங்க வேண்டியது அவசியம். எதிர்கால தலைமுறை வேறு எந்தத் துறையிலும் இல்லாத, சிறந்த எதிர்காலத் தலைமுறையை வளர்த்தெடுக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

அந்தப் பெருமிதத்துடன் இணைந்து எல்லோரும் பணியாற்றுவோம். இந்த பணியில் ஏற்படும் சிறுசிறு இடர்பாடுகளை, ஆண்டு முழுவதும் நாம் பாடம் நடத்திய, நம் மாணவர்களுக்காக பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் முழு மனநிறைவுடன் அனைவரும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அரசு தேர்வுத் துறை இயக்குநர் கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News