Monday, March 11, 2019

பழைய ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்த்து பட்டா வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

பழைய ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்த்து பட்டாவழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கிவைத்தார்.



இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் பழைய ஆவணங்களை கோராமல் அவற்றை ஆன்லைனிலேயே சரிபார்த்து பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கிவைத்தார்.



முதல்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டம்தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் உட்பிரிவு தேவைப்படாத இனங்களுக்கு ஆவணப்பதிவு முடிந்துதான் பட்டா பெற முடியும். அதோடு, இனிமேல் பதிவுசெய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான பட்டாமாற்றத்தை விரைவாக மேற் கொள்ளலாம். பொதுமக்கள் பட்டா மாற்றம் செய்யஅலுவலகம் செல்லாமல் ஆன்லைன் வழியில் பட்டாவை பதிவிவிறக்கம் செய்யமுடியும். இந்தஆவண நகல்களை பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்திவிரைவுக் குறியீடு மற்றும் சார்பதிவாளரால் இலக்கச் சான்றொப்ப மிட்ட ஆவண நகல்களை பதிவிறக் கம் செய்யலாம்.



புதிய கோட்டங்கள்

மேலும், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள வணிகவரி கோட்டத் தையும், திருமங்கலம் வருவாய் கோட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார். அதோடு, சென்னை கோயம்பேடு காய்கனி மொத்த விற்பனை வளாகத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்ட குளிர்பதனக் கிடங்கு, மதுரை, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ரூ.6 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகளையும் அவர் திறந்துவைத்தார்.

மேலும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் ரூ.14 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர் உருவச்சிலையையும் முதல்வர் திறத்துவைத்தார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் செயல் படுத்தப்பட உள்ள ரூ.660 கோடியே 75 லட்சம் செலவிலான திட்டப்பணிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நிறைவேற்றப்பட இருக்கிற ரூ.197 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News