Monday, March 4, 2019

இஎஸ்ஐ நிறுவனத்தில் வேலை : விண்ணப்பிக்கும் முறை..!

சென்னையில் உள்ள இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation) நிறுவனத்தில், அப்பர் டிவிசன் கிளார்க் மற்றும் ஸ்டெனோகிராபெர் பணிகளுக்கு, 151 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பணி :

அப்பர் டிவிசன் கிளார்க் (Upper Division Clerk)
ஸ்டெனோகிராபெர் (Stenographer)

காலிப்பணியிடங்கள் :

அப்பர் டிவிசன் கிளார்க் - 131
ஸ்டெனோகிராபெர் - 20
மொத்தம் = 151 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019




கட்டணம் :

1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் - 500 ரூபாய்
2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) - 250 ரூபாய்

குறிப்பு : முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு மற்ற விண்ணப்பதாரர்களான எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உள்ளிட்டோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை மீண்டும் திரும்பப் பெற இயலாது.

வயது வரம்பு :



1. யூ.ஆர். (UR) பிரிவினர் - 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
2. எஸ்.டி / எஸ்.சி (ST / SC) பிரிவினர் - 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
3. ஓ.பி.சி (OBC) பிரிவினர் - 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதியம் :
அப்பர் டிவிசன் கிளார்க், ஸ்டெனோகிராபெர் பணிக்கு மாதம் ரூ.25,500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
1. அப்பர் டிவிசன் கிளார்க் என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதாவது ஒரு பட்டத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. ஸ்டெனோகிராபெர் என்ற பணிக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து பயிற்சியில் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகளும், ஒரு நிமிடத்தில் குறைந்தபட்சமாக 30 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறமை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.




ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் இஎஸ்ஐசி-ன் (ESIC) www.esic.nic.in- என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையெழுத்து மற்றும் இடது கை பெருவிரலின் அச்சு அவசியம் தேவை.
மேலும், முழுமையான தகவல்களைப் பெற,
https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf- என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News