Tuesday, March 19, 2019

பொறியியல் படிப்புக்கான சேர்க்கை: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் திடீர் உயர்வு


சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.



இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆகவும், பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.


புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.

Popular Feed

Recent Story

Featured News