Sunday, March 31, 2019

மாணவர்களுக்கு மனவெழுச்சி ஆசிரியர்களுக்கு தனிப்பயிற்சி

மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கவும், பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது



ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில், மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வடிவமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், 188 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா, 10 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன



இப்புத்தகத்தில், வளரிளம் பருவ மாணவர்களை கையாளுவது, நேர்மறை எண்ணங்களை விதைப்பது, அவர்களின் மனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது, வாழ்க்கை திறன் வழிகாட்டுதல் என்பன உள்ளிட்ட, 10 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கையேடு மூலம் ஆசிரியர்கள், மாணவர்களை எளிதில் கையாள முடியும்



தற்போது, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், இப்புத்தகம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மாணவர்களுக்கான மனவெழுச்சி குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

Popular Feed

Recent Story

Featured News